Senthamil.Org

தேனெய்

தேவாரம்

தேனெய் புரிந்துழல் செஞ்சடை யெம்பெரு 
மானதி டந்திகழ் ஐங்கணையக் 
கோனை யெரித்தெரி யாடி இடங்குல 
வான திடங்குறை யாமறையாம் 
மானை இடத்ததோர் கையனி டம்மத 
மாறு படப்பொழி யும்மலைபோல் 
யானை யுரித்த பிரான திடங்கலிக் 
கச்சி அனேகதங் காவதமே.
தேனெய் எனத்தொடங்கும் தேவாரம்