Senthamil.Org

தெள்ளிய

தேவாரம்

தெள்ளிய புனலணி சிறுகுடி மேவிய
துள்ளிய மானுடை யீரே
துள்ளிய மானுடை யீரும தொழுகழல்
உள்ளுதல் செயநலம் உறுமே.
தெள்ளிய ரல்லாத் தேரரோ டமணர் தடுக்கொடு சீவரம் உடுக்குங்
கள்ளமார் மனத்துக் கலதிகட் கருளாக் கடவுளார் உறைவிடம் வினவில்
நள்ளிருள் யாமம் நான்மறை தெரிந்து நலந்திகழ் மூன்றெரி யோம்பும்
ஒள்ளியார் வாழும் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே.
தெள்ளிய பேய்பல புஜதம வற்றொடு 
நள்ளிருள் நட்டம தாடல் நவின்றோர் 
புள்ளுவ ராகும வர்க்கவர் தாமும் 
புள்ளுவ னார்உறை புஜவணம் ஈதோ.
தெள்ளிய எனத்தொடங்கும் தேவாரம்