Senthamil.Org

தெற்றினர்

தேவாரம்

தெற்றினர் புரங்கள் மூன்றுந் 
தீயினில் விழவோ ரம்பால் 
செற்றவெஞ் சிலையர் வஞ்சர் 
சிந்தையுட் சேர்வி லாதார் 
கற்றவர் பயிலும் நாகைக் 
காரோணங் கருதி யேத்தப் 
பெற்றவர் பிறந்தார் மற்றுப் 
பிறந்தவர் பிறந்தி லாரே.
தெற்றினர் எனத்தொடங்கும் தேவாரம்