Senthamil.Org

தெண்ணீர்ப்

தேவாரம்

தெண்ணீர்ப் புனற்கெடில வீரட்டமுஞ்
சிக்காலி வல்லந் திருவேட்டியும்
உண்ணீரார் ஏடகமும் ஊறல்அம்பர்
உறையூர் நறையூர் அரணநல்லூர்
விண்ணார் விடையான் விளமர்வெண்ணி
மீயச்சூர் வீழி மிழலைமிக்க
கண்ணார் நுதலார் கரபுரமுங்
காபாலி யாரவர்தங் காப்புக்களே.
தெண்ணீர்ப் எனத்தொடங்கும் தேவாரம்