Senthamil.Org

துளிமண்டி

தேவாரம்

துளிமண்டி யுண்டு நிறம்வந்த கண்டன் 
நடமன்னு துன்னு சுடரோன் 
ஒளிமண்டி யும்ப ருலகங் கடந்த 
உமைபங்க னெங்க ளரனுர் 
களிமண்டு சோலை கழனிக் கலந்த 
கமலங்கள் தங்கு மதுவின் 
தெளிமண்டி யுண்டு சிறைவண்டு பாடு 
திருமுல்லை வாயி லிதுவே.
துளிமண்டி எனத்தொடங்கும் தேவாரம்