Senthamil.Org

துறந்தார்க்குத்

தேவாரம்

துறந்தார்க்குத் தூநெறியாய் நின்றான் றன்னைத்
துன்பந் துடைத்தாள வல்லான் றன்னை
இறந்தார்க ளென்பே அணிந்தான் றன்னை
எல்லி நடமாட வல்லான் றன்னை
மறந்தார் மதின்மூன்று மாய்த்தான் றன்னை
மற்றொரு பற்றில்லா அடியேற் கென்றுஞ்
சிறந்தானைத் தென்கூடற் றிருவா லவாய்ச் 
சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.
துறந்தார்க்குத் எனத்தொடங்கும் தேவாரம்