Senthamil.Org

துறங்காட்டி

தேவாரம்

துறங்காட்டி யெல்லாம் விரித்தார் போலுந்
தூமதியும் பாம்பு முடையார் போலும்
மறங்காட்டி மும்மதிலு மெய்தார் போலும்
மந்திரமுந் தந்திரமுந் தாமே போலும்
அறங்காட்டி அந்தணர்க்கன் றால நீழல்
அறமருளிச் செய்த அரனா ரிந்நாள்
புறங்காட் டெரியாடிப் புஜதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே.
துறங்காட்டி எனத்தொடங்கும் தேவாரம்