Senthamil.Org

துஞ்சுநாள்

தேவாரம்

துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச் 
சுடர்விடு சோதியெம் பெருமான் 
நஞ்சுசேர் கண்ட முடையவென் நாதர் 
நள்ளிருள் நடஞ்செயும் நம்பர் 
மஞ்சுதோய் சோலை மாமயி லாட 
மாடமா ளிகைதன்மே லேறி 
பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும் 
பாம்புர நன்னக ராரே.
துஞ்சுநாள் எனத்தொடங்கும் தேவாரம்