Senthamil.Org

துஞ்சிருள்

தேவாரம்

துஞ்சிருள் காலை மாலை 
தொடர்ச்சியை மறந் திராதே 
அஞ்செழுத் தோதின் நாளும் 
அரனடிக் கன்ப தாகும் 
வஞ்சனைப் பால்சோ றாக்கி 
வழக்கிலா அமணர் தந்த 
நஞ்சமு தாக்கு வித்தார் 
நனிபள்ளி அடிக ளாரே.
துஞ்சிருள் எனத்தொடங்கும் தேவாரம்