Senthamil.Org

தீவாயின்

தேவாரம்

தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்குந் 
தீர்த்தா புராணனே யென்றேன் நானே
மூவா மதிசூடி யென்றேன் நானே
முதல்வாமுக் கண்ணனே யென்றேன் நானே
ஏவார் சிலையானே யென்றேன் நானே
இடும்பைக் கடல்நின்று மேற வாங்கி
ஆவாவென் றருள்புரியும் ஐயா றனே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
தீவாயின் எனத்தொடங்கும் தேவாரம்