Senthamil.Org

தீக்கூருந்

தேவாரம்

தீக்கூருந் திருமேனி யொருபால் மற்றை 
யொருபாலும் அரியுருவந் திகழ்ந்த செல்வர்
ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல
அருவினையேன் செல்வதுமே யப்பா லெங்கும்
நோக்கா ரொருவிடத்து நுலுந் தோலுந்
துதைந்திலங்குந் திருமேனி வெண்ணீ றாடி
வாக்கால் மறைவிரித்து மாயம் பேசி
வலம்புரமே புக்கிங்கே மன்னி னாரே.
தீக்கூருந் எனத்தொடங்கும் தேவாரம்