Senthamil.Org

திரையார்

தேவாரம்

திரையார் புனல்சூ டியசெல்வன் 
வரையார் மகளோ டுமகிழ்ந்தான் 
கரையார் புனல்சூழ் தருகாழி 
நிரையார் மலர்தூ வுமினின்றே.
திரையார் புனலோடு செல்வ மதிசூடி 
விரையார் பொழிலம்பர் மாகா ளம்மேய 
நரையார் விடையூரும் நம்பான் கழல்நாளும் 
உரையா தவர்கண்மேல் ஒழியா வுஜனம்மே.
திரையார் புனற்கெடில வீரட்டமுந்
திருவாரூர் தேவுஜர் திருநெல்லிக்கா
உரையார் தொழநின்ற ஒற்றியூரும்
ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும்
வரையா ரருவிசூழ் மாநதியும்
மாகாளங் கேதாரம் மாமேருவுங்
கரையார் புனலொழுகு காவிரிசூழ் 
கடம்பந் துறையுறைவார் காப்புக்களே.
திரையார் எனத்தொடங்கும் தேவாரம்