Senthamil.Org

திரையானுஞ்

தேவாரம்

திரையானுஞ் செந்தா மரைமே லானுந் 
தேர்ந்தவர்கள் தாந்தேடிக் காணார் நாணும்
புரையா னெனப்படுவார் தாமே போலும்
போரேறு தாமேறிச் செல்வார் போலுங்
கரையா வரைவில்லே நாகம் நாணாக்
காலத்தீ யன்ன கனலார் போலும்
வரையார் மதிலெய்த வண்ணர் போலும்
ஆக்கூரில் தான்றோன்றி யப்ப னாரே.
திரையானுஞ் எனத்தொடங்கும் தேவாரம்