Senthamil.Org

திருவுமெய்ப்

தேவாரம்

திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன் 
 சீருடைக் கழல்களென் றெண்ணி 
ஒருவரை மதியா துறாமைகள் செய்து 
 மூடியும் உறைப்பனாய்த் திரிவேன் 
முருகமர் சோலை சூழ்திரு முல்லை 
 வாயிலாய் வாயினால் உன்னைப் 
பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் 
 பாசுப தாபரஞ் சுடரே.
திருவுமெய்ப் எனத்தொடங்கும் தேவாரம்