Senthamil.Org

திருந்தாத

தேவாரம்

திருந்தாத வாளவுணர் புரமூன்றும் வேவச் 
சிலைவளைவித் தொருகணையாற் றொழில்புஜண்ட சிவனைக் 
கருந்தாள மதகளிற்றின் உரியானைப் பெரிய 
கண்மூன்றும் உடையானைக் கருதாத அரக்கன் 
பெருந்தோள்கள் நாலைந்தும் ஈரைந்து முடியும் 
உடையானைப் பேயுருவ மூன்றுமுற மலைமேல் 
இருந்தானை எறிகெடில வடவீரட் டானத் 
துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
திருந்தாத எனத்தொடங்கும் தேவாரம்