Senthamil.Org

திருந்தா

தேவாரம்

திருந்தா அமணர்தந் தீநெறிப் 
பட்டுத் திகைத்துமுத்தி 
தருந்தா ளிணைக்கே சரணம் 
புகுந்தேன் வரையெடுத்த 
பொருந்தா அரக்கன் உடல்நெரித் 
தாய்பா திரிப்புலியூர் 
இருந்தாய் அடியேன் இனிப்பிற 
வாமல்வந் தேன்றுகொள்ளே.
திருந்தா எனத்தொடங்கும் தேவாரம்