Senthamil.Org

திருநின்ற

தேவாரம்

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட 
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன் 
பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன் 
பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன் 
ஒருநம்பி அப்புஜதி அடியார்க்கும் அடியேன் 
ஒலிபுனல்சூழ் சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன் 
அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் 
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
திருநின்ற எனத்தொடங்கும் தேவாரம்