Senthamil.Org

திருதிமையால்

தேவாரம்

திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்
திகையாதே சிவாயநம என்னுஞ் சிந்தைச்
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்
கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்
பருதிதனைப் பற்பறித்த பாவ நாசா
பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்
கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே 
கன்றாப்புஜர் நடுதறியைக் காண லாமே.
திருதிமையால் எனத்தொடங்கும் தேவாரம்