Senthamil.Org

திரியும்

தேவாரம்

திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச் 
 செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக் 
கரியின் ஈருரி போர்த்துகந் தானைக் 
 காம னைக்கன லாவிழித் தானை 
வரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை 
 மருவி யேத்தி வழிபடப் பெற்ற 
மூபெரிய கம்பனை எங்கள்பி ரானைக் 
 காணக் கண்அடி யேன்பெற்ற வாறே. 
மூகாமாட்சியம்மையால் புஜசிக்கப்பட்ட ஏகாம்பர 
நாதரே பெரியகம்பர்.
திரியும் முப்புரஞ் செற்றதுங் குற்றத் 
 திறல ரக்கனைச் செறுத்ததும் மற்றைப் 
பெரிய நஞ்சமு துண்டதும் முற்றும் 
 பின்னை யாய்முன்ன மேமுளைத் தானை 
அரிய நான்மறை அந்தணர் ஓவா 
 தடிப ணிந்தறி தற்கரி யானை 
வரையின் பாவை மணாளனெம் மானை 
 வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
திரியும் எனத்தொடங்கும் தேவாரம்