Senthamil.Org

தினைத்தா

தேவாரம்

தினைத்தா ளன்ன செங்கால் நாரை 
 சேருந் திருவாரூர்ப் 
புனைத்தார் கொன்றைப் பொன்போல் மாலைப் 
 புரிபுன் சடையீரே 
தனத்தா லின்றித் தாந்தாம் மெலிந்து 
 தங்கண் காணாது 
மனத்தால் வாடி அடியார் இருந்தால் 
 வாழ்ந்து போதீரே.
தினைத்தா எனத்தொடங்கும் தேவாரம்