Senthamil.Org

திண்குணத்தார்

தேவாரம்

திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித் 
திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்
விண்குணத்தார் வேள்வி சிதைய நுறி
வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்
பண்குணத்தார் பாடலோ டாட லோவாப்
பரங்குன்ற மேய பரமர் போலும்
எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்
இடைமருது மேவிய ஈச னாரே.
திண்குணத்தார் எனத்தொடங்கும் தேவாரம்