Senthamil.Org

திங்களம்

தேவாரம்

திங்களம் போதுஞ் செழும்புனலுஞ் 
செஞ்சடை மாட்டயல் வைத்துகந்து 
நங்கள் மகிழுநள் ளாறுடைய 
நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய் 
பொங்கிள மென்முலை யார்களோடும் 
புனமயி லாட நிலாமுளைக்கும் 
அங்கள கச்சுதை மாடக்கூடல் 
ஆலவா யின்கண் அமர்ந்தவாறே.
திங்களம் எனத்தொடங்கும் தேவாரம்