Senthamil.Org

திக்கிற்றே

தேவாரம்

திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச் 
சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே 
புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப் 
போலேபுஜநீர் தீகான்மீப் புணர்தரு முயிர்கள்திறஞ் 
சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை செங்கதத் 
தோடேயாமே மாலோகத் துயர்களை பவனதிடங் 
கைக்கப்போ யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக் 
காடேயோடா ஊரேசேர் கழுமல வளநகரே.
திக்கிற்றே எனத்தொடங்கும் தேவாரம்