Senthamil.Org

தாரிடு

தேவாரம்

தாரிடு கொன்றையொர் வெண்மதி கங்கை 
தாழ்சடை மேலவை சூடி 
ஊரிடு பிச்சை கொள்செல்வம் 
உண்டி யென்று பலகூறி 
வாரிடு மென்முலை மாதொரு பாகம் 
ஆயவன் வாழ்கொளி புத்தூர்க் 
காரிடு மாமலர் தூவி 
கறைமிடற் றானடி காண்போம்.
தாரிடு எனத்தொடங்கும் தேவாரம்