Senthamil.Org

தளையவிழ்

தேவாரம்

தளையவிழ் தண்ணிற நீலம்நெய்தல் 
தாமரை செங்கழு நீருமெல்லாங் 
களையவி ழுங்குழ லார்கடியக் 
காதலிக் கப்படுங் காட்டுப்பள்ளித் 
துளைபயி லுங்குழல் யாழ்முரல 
துன்னிய இன்னிசை யால்துதைந்த 
அளைபயில் பாம்பரை யார்த்தசெல்வர்க் 
காட்செய அல்லல் அறுக்கலாமே.
தளையவிழ் எனத்தொடங்கும் தேவாரம்