Senthamil.Org

தலைமதி

தேவாரம்

தலைமதி புனல்விட அரவிவை 
தலைமைய தொருசடை யிடையுடன் 
நிலைமரு வவொரிட மருளினன் 
நிழன்மழு வினொடழல் கணையினன் 
மலைமரு வியசிலை தனின்மதி 
லெரியுண மனமரு வினன்நல 
கலைமரு வியபுற வணிதரு 
கழுமலம் இனிதமர் தலைவனே.
தலைமதி எனத்தொடங்கும் தேவாரம்