Senthamil.Org

தரையொடு

தேவாரம்

தரையொடு திவிதல நலிதரு 
தகுதிற லுறுசல தரனது 
வரையன தலைவிசை யொடுவரு 
திகிரியை அரிபெற அருளினன் 
உரைமலி தருசுர நதிமதி 
பொதிசடை யவனுறை பதிமிகு 
திரைமலி கடல்மண லணிதரு 
பெறுதிடர் வளர்திரு மிழலையே.
தரையொடு எனத்தொடங்கும் தேவாரம்