Senthamil.Org

தருவினை

தேவாரம்

தருவினை மருவுங் கங்கை 
தங்கிய சடையன் எங்கள் 
அருவினை அகல நல்கும் 
அண்ணலை அமரர் போற்றுந் 
திருவினைத் திருவே கம்பஞ் 
செப்பிட உறைய வல்ல 
உருவினை உருகி ஆங்கே 
உள்ளத்தால் உகக்கின் றேனே.
தருவினை எனத்தொடங்கும் தேவாரம்