Senthamil.Org

தருஞ்சரதந்

தேவாரம்

தருஞ்சரதந் தந்தருளென் றடிநினைந்து 
தழலணைந்து தவங்கள்செய்த 
பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோ 
ழமையளித்த பெருமான்கோயில் 
அரிந்தவய லரவிந்த மதுவுகுப்ப 
அதுகுடித்துக் களித்துவாளை 
கருஞ்சகடம் இளகவளர் கரும்பிரிய 
அகம்பாயுங் கழுமலமே.
தருஞ்சரதந் எனத்தொடங்கும் தேவாரம்