Senthamil.Org

தருக்கு

தேவாரம்

தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி 
யுன்னித் தடவரையை 
வரைக்கை களாலெடுத் தார்ப்ப 
மலைமகள் கோன்சிரித்து 
அரக்கன் மணிமுடி பத்தும் 
அணிதில்லை யம்பலவன் 
நெருக்கி மிதித்த விரல்கண்ட 
கண்கொண்டு காண்பதென்னே.
தருக்கு எனத்தொடங்கும் தேவாரம்