Senthamil.Org

தருக்கிய

தேவாரம்

தருக்கிய திரிபுரத் தவர்கள் தாம்உகப் 
பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர் 
பொருக்கடல் புடைதரு புஜந்த ராய்நகர்க் 
கருக்கிய குழலுமை கணவர் காண்மினே.
தருக்கிய தக்கன்றன் வேள்வி 
தகர்த்தன தாமரைப்போ 
துருக்கிய செம்பொன் உவமன் 
இலாதன வொண்கயிலை 
நெருக்கிய வாளரக் கன்றலை 
பத்தும் நெரித்தவன்றன் 
இருக்கியல் பாயின இன்னம்ப 
ரான்றன் இணையடியே.
தருக்கிய எனத்தொடங்கும் தேவாரம்