Senthamil.Org

தரித்தானைத்

தேவாரம்

தரித்தானைத் தண்கடல்நஞ் சுண்டான் றன்னைத் தக்கன்றன் பெருவேள்வி தகர்த்தான் றன்னைப் பிரித்தானைப் பிறைதவழ்செஞ் சடையி னானைப் பெருவலியால் மலையெடுத்த அரக்கன் றன்னை நெரித்தானை நேரிழையாள் பாகத் தானை நீசனேன் உடலுறுநோ யான தீர அரித்தானை ஆவடுதண் டுறையுள் மேய அரனடியே அடிநாயேன் அடைந்துய்ந் தேனே.
தரித்தானைத் எனத்தொடங்கும் தேவாரம்