Senthamil.Org

தரிக்குந்

தேவாரம்

தரிக்குந் தரைநீர் தழற்காற் றந்தரஞ் 
சந்திரன் சவிதாவிய மானனானீர் 
சரிக்கும் பலிக்குத் தலையங்கை யேந்தித் 
தையலார் பெய்யக்கொள் வதுதக்கதன்றால் 
முரிக்குந் தளிர்ச்சந் தனத்தொடு வேயும் 
முழங்குந் திரைக்கைக ளால்வாரிமோதி 
அரிக்கும் புனல்சேர் அரிசிற் றென்கரை 
அழகார் திருப்புத்தூர் அழகனீரே.
தரிக்குந் எனத்தொடங்கும் தேவாரம்