Senthamil.Org

தம்மையேபுகழ்ந்

தேவாரம்

தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ் 
சார்வினுந்தொண்டர் தருகிலாப் 
பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை 
புகலூர்பாடுமின் புலவீர்காள் 
இம்மையேதருஞ் சோறுங்கூறையும் 
ஏத்தலாமிடர் கெடலுமாம் 
அம்மையேசிவ லோகமாள்வதற் 
கியாதுமையுற வில்லையே.
தம்மையேபுகழ்ந் எனத்தொடங்கும் தேவாரம்