Senthamil.Org

தம்மானங்

தேவாரம்

தம்மானங் காப்ப தாகித் 
தையலார் வலையு ளாழ்ந்து 
அம்மானை அமுதன் றன்னை 
ஆதியை அந்த மாய 
செம்மான ஒளிகொள் மேனிச் 
சிந்தையு ளொன்றி நின்ற 
எம்மானை நினைய மாட்டேன் 
என்செய்வான் தோன்றி னேனே.
தம்மானங் எனத்தொடங்கும் தேவாரம்