Senthamil.Org

தன்னவனா

தேவாரம்

தன்னவனா யுலகெல்லாந் தானே யாகித் தத்துவனாய்ச் சார்ந்தார்க்கின் னமுதா னானே என்னவனா யென்னிதயம் மேவி னானே ஈசனே பாச வினைகள் தீர்க்கும் மன்னவனே மலைமங்கை பாக மாக வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னித் தென்னவனே திருச்சோற்றுத் துறையு ளானே திகழொளியே சிவனேயுன் னபயம் நானே.
தன்னவனா எனத்தொடங்கும் தேவாரம்