Senthamil.Org

செய்யநின்

தேவாரம்

செய்யநின் கமல பாதஞ் 
சேருமா தேவர் தேவே 
மையணி கண்டத் தானே 
மான்மறி மழுவொன் றேந்துஞ் 
சைவனே சால ஞானங் 
கற்றறி விலாத நாயேன் 
ஐயனே ஆல வாயில் 
அப்பனே அருள்செ யாயே.
செய்யநின் எனத்தொடங்கும் தேவாரம்