Senthamil.Org

செய்யதா

தேவாரம்

செய்யதா மரைமேல் அன்னமே யனைய சேயிழை திருநுதற் செல்வி
பையர வல்குற் பாண்டிமா தேவி நாடொறும் பணிந்தினி தேத்த
வெய்யவேற் சூலம் பாசம்அங் குசமான் விரிகதிர் மழுவுடன் தரித்த
ஐயனார் உமையோ டின்புறு கின்ற ஆலவா யாவதும் இதுவே.
செய்யதா எனத்தொடங்கும் தேவாரம்