Senthamil.Org

செய்ஞ்ஞின்ற

தேவாரம்

செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற 
தில்லைச்சிற் றம்பலவன் 
மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள் 
கண்டு மகிழ்ந்துநிற்க 
நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த 
நீல மணிமிடற்றான் 
கைஞ்ஞின்ற ஆடல்கண் டாற்பின்னைக் 
கண்கொண்டு காண்பதென்னே.
செய்ஞ்ஞின்ற எனத்தொடங்கும் தேவாரம்