Senthamil.Org

செம்பொன்

தேவாரம்

செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக்
 கரிய கண்டனை மால்அயன் காணாச் 
சம்பு வைத்தழல் அங்கையி னானைச் 
 சாம வேதனைத் தன்னொப்பி லானைக் 
கும்ப மாகரி யின்னுரி யானைக் 
 கோவின் மேல்வருங் கோவினை எங்கள் 
நம்ப னைநள் ளாறனை அமுதை 
 நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
செம்பொன் எனத்தொடங்கும் தேவாரம்