Senthamil.Org

செம்பொ

தேவாரம்

செம்பொ னார்தரு வேங்கையும் ஞாழலுஞ் 
செருந்திசெண் பகமானைக் 
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை 
குருந்தலர் பரந்துந்தி 
அம்பொன் நேர்வரு காவிரி வடகரை 
மாந்துறை யுறைகின்ற 
எம்பி ரானிமை யோர்தொழு பைங்கழ 
லேத்துதல் செய்வோமே.
செம்பொ னேயொக்கும் மேனியன் தேசத்தில்
உம்ப ராரவ ரோடங் கிருக்கிலும்
பொன்பொ னார்செல்வப் புஜந்துருத் திந்நகர்
நம்பன் சேவடிக் கீழ்நா மிருப்பதே.
செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந் 
தீயெ ழச்சிலை கோலினாய் 
வம்பு லாங்குழ லாளைப் பாகம 
மர்ந்து காவிரிக் கோட்டிடைக் 
கொம்பின் மேற்குயில் கூவ மாமயி 
லாடு பாண்டிக் கொடுமுடி 
நம்ப னேயுனை நான்ம றக்கினுஞ் 
சொல்லும் நாநமச்சி வாயவே.
செம்பொ எனத்தொடங்கும் தேவாரம்