Senthamil.Org

செம்பைச்சேர்

தேவாரம்

செம்பைச்சேர் இஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற் 
சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன் 
இம்பர்க்கே தஞ்செய்திட் டிருந்தரன் பயின்றவெற் 
பேரார்புஜநே ரோர்பாதத் தெழில்விரல் அவண்நிறுவிட் 
டம்பொற்புஜண் வென்றித்தோள் அழிந்துவந்த னஞ்செய்தாற் 
காரார்கூர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங் 
கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக் 
காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே.
செம்பைச்சேர் எனத்தொடங்கும் தேவாரம்