Senthamil.Org

செப்பிள

தேவாரம்

செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக 
விடையேறு செல்வ னடைவார் 
ஒப்பிள மதியுமப்பும் முடிமே லணிந்தென் 
உளமே புகுந்த அதனால் 
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும் 
வினையான வந்து நலியா 
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல 
அடியா ரவர்க்கு மிகவே.
செப்பிள எனத்தொடங்கும் தேவாரம்