Senthamil.Org

சென்றுதாதை

தேவாரம்

சென்றுதாதை யுகுத்தனன் பாலையே சீறியன்பு செகுத்தனன் பாலையே
வென்றிசேர்மழுக் கொண்டுமுன் காலையே வீடவெட்டிடக் கண்டுமுன் காலையே
நின்றமாணியை யோடின கங்கையால் நிலவமல்கி யுதித்தன கங்கையால்
அன்றுநின்னுரு வாகத் தடவியே ஆலவாயர னாகத் தடவியே.
சென்றுதாதை எனத்தொடங்கும் தேவாரம்