Senthamil.Org

சூல

தேவாரம்

சூல முண்டுமழு வுண்டவர் தொல்படை சூழ்கடல்
ஆல முண்டபெரு மான்றன் அனேகதங் காவதம்
நீல முண்டதடங் கண்ணுமை பாகம் நிலாயதோர்
கோல முண்டள வில்லை குலாவிய கொள்கையே.
சூல மேந்திவளர் கையினர் மெய்சுவண் டாகவே
சால நல்லபொடிப் புஜசுவர் பேசுவர் மாமறை
சீல மேவுபுக ழாற்பெரு குந்திரு வாஞ்சியம்
ஆல முண்டவடி கள்ளிட மாக அமர்ந்ததே.
சூல வஞ்சனை வல்லவெஞ் சுந்தரன்
கோல மாவருள் செய்ததோர் கொள்கையான்
காலன் அஞ்ச வுதைத்திருள் கண்டமாம்
வேலை நஞ்சனைக் கண்டது வெண்ணியே.
சூல மேந்துவர் தோலுடை ஆடையர்
ஆல முண்டமு தேமிகத் தேக்குவர்
கால காலர் கடவுஜர் மயானத்தார்
மாலை மார்பர் பெருமா னடிகளே.
சூல மல்கிய கையுஞ் சுடரொடு 
பாலு நெய்தயி ராடிய பான்மையும் 
ஞால மல்கிய நாரையூர் நம்பனுக் 
கால நீழலும் அம்ம அழகிதே.
சூல எனத்தொடங்கும் தேவாரம்