Senthamil.Org

சூடினார்

தேவாரம்

சூடினார் கங்கை யாளைச் 
சூடிய துழனி கேட்டங் 
கூடினாள் நங்கை யாளும் 
ஊடலை ஒழிக்க வேண்டிப் 
பாடினார் சாம வேதம் 
பாடிய பாணி யாலே 
ஆடினார் கெடில வேலி 
அதிகைவீ ரட்ட னாரே.
சூடினார் எனத்தொடங்கும் தேவாரம்