Senthamil.Org

சூடல்வெண்

தேவாரம்

சூடல்வெண் பிறையினர் சுடர்முடியர் 
சுண்ணவெண் ணீற்றினர் சுடர்மழுவர் 
பாடல்வண் டிசைமுரல் கொன்றையந்தார் 
பாம்பொடு நுலவை பசைந்திலங்கக் 
கோடனன் முகிழ்விரல் கூப்பிநல்லார் 
குறையுறு பலியெதிர் கொணர்ந்துபெய்ய 
வாடல்வெண் டலைபிடித் திவராணீர் 
வாய்மூ ரடிகள் வருவாரே.
சூடல்வெண் எனத்தொடங்கும் தேவாரம்