Senthamil.Org

சுழித்துணையாம்

தேவாரம்

சுழித்துணையாம் பிறவிவழித் துக்கம் நீக்குஞ் 
சுருள்சடையெம் பெருமானே தூய தெண்ணீர்
இழிப்பரிய பசுபாசப் பிறப்பை நீக்கும் 
என்றுணையே என்னுடைய பெம்மான் தம்மான்
பழிப்பரிய திருமாலும் அயனுங் காணாப் 
பரிதியே சுருதிமுடிக் கணியாய் வாய்த்த
வழித்துணையாம் மழபாடி வயிரத் தூணே
என்றென்றே நானரற்றி நைகின் றேனே.
சுழித்துணையாம் எனத்தொடங்கும் தேவாரம்