Senthamil.Org

சுற்றிவண்

தேவாரம்

சுற்றிவண் டியாழ்செயுஞ் சோலையுங் 
காவுந் துதைந்திலங்கு 
பெற்றிகண் டால்மற்று யாவருங் 
கொள்வர் பிறரிடைநீ 
ஒற்றிகொண் டாயொற்றி யூரையுங் 
கைவிட் டுறுமென்றெண்ணி 
விற்றிகண் டாய்மற் றிதுவொப்ப 
தில்லிடம் வேதியனே.
சுற்றிவண் எனத்தொடங்கும் தேவாரம்