Senthamil.Org

சுருளுறு

தேவாரம்

சுருளுறு வரையின் மேலாற் 
றுளங்கிளம் பளிங்கு சிந்த 
இருளுறு கதிர்நு ழைந்த 
இளங்கதிர்ப் பசலைத் திங்கள் 
அருளுறும் அடிய ரெல்லாம் 
அங்கையின் மலர்கள் ஏந்த 
மருளுறு கீதங் கேட்டார் 
வலம்புரத் தடிக ளாரே.
சுருளுறு எனத்தொடங்கும் தேவாரம்